×

பெரியாரை குருவாக ஏற்றவர் வ.உ.சி. : வீரமணி பேட்டி

திருச்சி: வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளையொட்டி திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சமூக நீதிக்கு ஆதரவாகவே எப்பொழுதும் செயல்பட்டார். அவர் தேசிய இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். இயக்கத்துக்குள் என்ன நிலைப்பாடு எடுத்தாலும் சமூகநீதி பாதையிலேயே இருந்தார். பெரியாரை தன்னுடைய குரு என கூறியவர் வ.உ.சி. அவருடைய பிறந்த நாளை தான் தற்போது அரசு விழாவாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம், தமிழ் மொழியில் அர்ச்சனை திட்டம் ஆகியவற்றை விமர்சனம் செய்பவர்களுக்கு உயர் நீதிமன்றமே பதில் அளித்து விட்டது. உயர் நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது. உயர் நீதிமன்றம் மூலம் கிடைத்த தோல்வியின் மூலமாவது அவர்களுக்கு புத்தி கிடைத்தால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்….

The post பெரியாரை குருவாக ஏற்றவர் வ.உ.சி. : வீரமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : V.U.C. ,Veeramani ,Trichy ,V.U.Chitambaranar ,Trichy Court ,D.K. President ,K. Veeramani Malli ,V.U.C ,Periyar ,
× RELATED இந்து மத சடங்குகளின்றி நடைபெறும்...